×

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் நிர்வாகம் குறித்து  அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்  பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம்  செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நல உதவித் திட்டங்கள் மற்றும் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் நிருவாகம் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்தார். 2022-2023 ஆம் ஆண்டின் புதிய அறிவிப்புகளை நடைமுறைபடுத்துவது குறித்தும், துறையின் திட்டச் செயல்பாடு,  கள்ளர் சீரமைப்பு பள்ளி/விடுதிகள் (ம)  இத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரி /பள்ளி விடுதிகளின் நிர்வாகம், 11-ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம், விடுதி மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் இலவசச் சீருடை வழங்கும் திட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல வகுப்பைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் இலவச சலவைப்பெட்டிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம், கிராமப்புறப் பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்,  வீடற்ற ஏழை/எளிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல வகுப்பை சார்ந்தவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டம், நரிக்குறவர் நல வாரியம், சீர்மரபினர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு கடனுதவி திட்டங்கள் உரிய முறையில் மக்களை சென்றடைய வேண்டும் தொடர்பாகவும்  இணை இயக்குநர், மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களிடம் தெரிவித்தார்.மேலும், இத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளி/ கல்லூரி விடுதிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ளுமாறும் வரும் கல்வி ஆண்டில் அனைத்து விடுதிகளிலும் ஒப்பளிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கைக்கு குறையாமல் மாணவர்களை தங்க வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்குமாறு இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு)  மற்றும் அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களையும் கேட்டுக்கொண்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மேற்கண்ட திட்டங்களை எவ்விதத் தொய்வும் ஏற்படாத வண்ணம் செயல்படுத்திடுமாறும், அரசின் நிலையான வழிகாட்டு  நெறிமுறைகளைப் பின்பற்றி விடுதிகளை நன்முறையில்  பராமரிப்பு செய்து மாணாக்கர்கள் தங்கும் வகையில் உகந்த சூழலை உருவாக்குமாறும் எவ்விதப் புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் பணிபுரிய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்கள். மேற்படி ஆய்வுக் கூட்டத்தில்  பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலர் ஆ.கார்த்திக், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர்  துறைமுகம் காஜா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர்  அனில் மேஷ்ராம்,  மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் மா.மதிவாணன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சிறப்புச் செயலர் வா.சம்பத்  தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் நந்தகோபால், மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Minister of Welfare Minister ,R.R. S.S. ,Rajaganappan ,Chennai ,Department of Welfare, Exalted and ,Ceramarabiner ,Dinakaran ,
× RELATED கர்நாடக அணைகளிலிருந்து காவிரி...